Thursday, November 11, 2010

ஒபாமா வருகை - சந்தேகங்கள்

அமெரிக்காவின் கறுப்பின ஜனாதிபதி ஒபாமா இந்தியாவுக்கு வருகை என்றதும், ஒரு மாறுதலான ஏற்பாடுகள் அமையும் என்று எதிர் பார்த்தால், அதே அமெரிக்க பாதுகாவலர்கள் முன்னாலேயே வந்து, ஏற்பாடுகளை கவனித்தது, இந்திய ஜனாதிபதியே அமேரிக்கா போனாலும் பாதுகாப்புக் கெடுபிடி என்ற பெயரில் அசிங்கப் படுத்தி விட்டு, பிரச்சனையாகும்போது, “சாரி” என்ற ஒற்றை வார்த்தையில் அதை கழுவித் துடைத்து விடும் அமெரிக்கத் திமிர், அமெரிக்க ஜனாதிபதி வரும்போதெல்லாம், அமெரிக்கப் பாதுகாப்பு வளையத்திலேயே வருவதும், இங்கு ஆளுபவர்கள் சொரணையின்றி, அவர்களின் கட்டுப்பாட்டின் கீழேயே தங்கள் வரவேற்பில் இருந்து எல்லாவற்றையும் வைத்துக் கொள்வதும் ஒபாமா வருகையின் போதும் நிகழ்ந்ததால், ஒபாமா இன்னொரு ஜார்ஜ் புஷ் என்பது தெளிவாகி இருக்கிறது.

இன்னும் சில,

ஒன்றும் இல்லாத காரணத்தை சொல்லி இராக்கை, ஆப்கானிஸ்தானை சிதைத்த அமேரிக்கா இப்போது அழிக்க நினைப்பது பாகிஸ்தானை.

காரணம், ஈரானை அழிக்க எண்ணிய போது ஈராக்கின் சத்தாம் அமெரிக்காவுக்கு தேவைப்பட்டார். பின்னாளில் சத்தாம் தன்மானத்தோடு, நிமிர்ந்த போது, தன் அனைத்து ரகசியமும் அறிந்த சத்தாமை உலகத்தையே முட்டாளாக்கி அழித்தாயிற்று.

அடுத்து ஆப்கானிஸ்தான் போராளிகளை சோவியத் யூனியனை அழிக்கப் பயன்படுத்தி, ரஷ்ய வல்லரசு அந்தக் கிரீடத்தை இழந்தவுடன், எங்கே தன்னை காட்டி கொடுத்து விடுவார்களோ, தனக்கு எதிராக கிளம்பி விடுவார்களோ என்ற பயத்திலேயே, தானே தனக்கு வெடி வைத்துக் கொண்டு (இரட்டை கோபுர கட்டிடத்தை இடித்துக் கொண்டு) கேவலமாக ஆப்கானிஸ்தான் போராளிகள் மீது பழி போட்டு, ஆப்கானிஸ்தானை சீரழித்து, ஒரு அடிமை அரசை ஏற்படுத்தியாயிற்று.

அடுத்த அமெரிக்காவின் குறி ஈரானாகவே இருந்த நிலையில் ஈரானில் இருந்து வரும் சிக்னல்கள் பயங்கரமாக இருப்பதால் (தினமும் ஏவுகணை சோதனை, மக்களின் அரசுக்கு ஆதரவான போக்கு, எதிரிகளை உண்டாக்க எண்ணிய அமெரிக்காவுக்கு ஈரானின் தேர்தல்களில் ஆப்பு, ஆன்மிகத் தலைவர்தான் அமெரிக்காவுக்கு எதிரி என்ற நிலை மாறிப் போய், அரசுத் தலைவர் நிஜாதி யின் ஆர்ப்பரிப்பு அதை விட வீரியம் மிக்கதாகி, எல்லாத் திசைகளும் ஈரானில் அடைபட்டுப் போனதால் பொத்திக் கொண்டது அமெரிக்கா)

இப்போது அமெரிக்காவின் கண்ணை உறுத்துவது பாகிஸ்தான். காரணம் பாகிஸ்தானும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைதான். இந்திரா காந்தி காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் சண்டை நடந்த போது, இந்தியா எல்லை மீறினால் பாகிஸ்தானை காப்பாற்ற அமெரிக்காவின் கப்பற்படையின் பத்தாம் பிரிவு கப்பல் பாகிஸ்தான் கடலில் நன்கூரமிட்டிருந்ததை இந்திய வரலாற்றை ஊன்றி கவனிப்பவர்கள் மறந்திருக்க முடியாது. இன்று வரை கிளிண்டன், புஷ், காண்டலிசா, ஹிலாரி என அமெரிக்க பூச்சாண்டிகள் இந்தியா வரும்போதெல்லாம் பாகிஸ்தானுக்கும் வந்து டபுள் கேம் ஆடியதுதான் நடந்துள்ளது.
இப்போது ஒபாமா அந்தப் பூச்சாண்டி காட்டாதது, "பாகிஸ்தானை நாங்கள் அழிக்க . நினைத்தால் இந்தியா தளம் தர வேண்டும். இல்லையேல் அடுத்த முறை நாங்கள் வரும்போது பாகிஸ்தானுக்கு மட்டும் வந்து இந்தியாவை பயமுறுத்துவோம்" என்ற சிக்னளுக்குத்தான்.

இல்லை என்றால் ஆதாயமில்லாமல் ஆசாமி தன செலவில் (ஒரு நாளுக்கு தொள்ளாயிரம் கோடி செலவில் ஒரு வாரம் அறுபத்து மூவாயிரம் செலவுக்குத் தந்து) வந்து விட்டுப் போவானா?

அமெரிக்காவால் ஒரு புண்ணாக்கும் இந்தியாவுக்குப் புண்ணியமில்லை என்பதும், இந்தியாவின் தயவிலேயே அமெரிக்கா வாழ்கிறது என்பதும், இந்தியா நம்ப வேண்டியது இனி இஸ்லாமிய தேசங்களை மட்டுமே என்பதையும் சில உதாரணங்களில் பார்ப்போம்.

யுரேனியம் கேட்டு ஆஸ்திரேலியாவுடனும், அமெரிக்காவுடனும் ஒப்பந்தம் போட்டு வருடம் பல ஆகியும் ஒரு கிராம் யுரேனியமும் கிடைக்கவில்லை. மாறாக எக்கச்சக்க நிபந்தனைகள் பதிலாக வந்துள்ளன. ஆனால் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த கஜகஸ்தான் யுரேனியம் தாராளமாக தருவோம் என்று கூறியுள்ளது கவனிக்கத் தக்கது.

(சென்ற வருட குடியரசு நாளில் கஜகஸ்தான் அதிபர் இந்தியா வந்தது குறிப்பிடத் தக்கது)

ஈரான் தாராளமாக எரிவாயு தருகிறோம் என்று சொன்ன பிறகும், அது வர வேண்டிய வழி பாகிஸ்தான் என்ற போதும், பாகிஸ்தான் “நாங்கள் எந்த இடையூறும் செய்ய மாட்டோம்” என்ற பிறகும், “உனது விரோதியாக நீ நினைக்கிறவனே சரி என்றாலும், எனக்குப் பிடிக்காத, என்னை பணியாத நாட்டோடு நீ பாசமாக இருப்பதை நான் ஏற்க மாட்டேன்” என்று இன்று வரை எறி வாயுவுக்கு தடையாக இருப்பதை அட்லீஸ்ட் பத்திரிகை படிப்பவர்கள் மறக்க முடியுமா?

எல்லோரும், யோக்கியர் என்கிறார்களே இந்த ஒபாமா, இவர் என்ன சாமானியமா?

இவர் பங்குக்கு வாயாலேயே பூச்சாண்டி காட்டினாரே இந்தியாவுக்கு! ஐ டி துறையில் இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்ரைட் கொடுக்கும் கம்பெனிகளுக்கு வரிவிலக்குக் கிடையாது என்று மிரட்டவில்லையா?

இந்தியாவில் சுரண்டிய பணத்தில் ஐ டி படித்து விட்டு படிப்பு மப்பு ஏறியவுடன் அமெரிக்காதான் தன் ஸ்டேட்டசுக்கு லாயக்கு என்று கப்பல் ஏறும் இந்தியன், ஒருவன் விடாமல் இந்தியா திரும்பி விட்டால் மைக்ரோசாப்ட் உட்பட ஆடிப்போய் அமெரிக்கா, அது சீரழித்த ஈராக்கை விட கீழ்த்தரமாகி விடும் என்பததுதான் உண்மை.
இதையெல்லாம் மறைத்து மொங்காம் போடும் அரசியல் வாதிகளும், ஜால்ரா பத்திரிகைகளும் ஆஹா! ஒஹோ! அமெரிக்க அதிபர் வந்தால் பாலாறு தேனாறு ஓடும் என்று பேசுவதும், எழுதுவதும், நாம் கையை வாயில் வைத்து சப்பிக் கொண்டே வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கை ஆகி விட்டது.

ஒன்று உண்மை, இந்திய சுதந்திரம் பிரதமரை, ஜனாதிபதியை கூண்டுக்குள் நிறுத்தி கொடியேற்ற வைத்துள்ளதையும், குடியரசு, சுதந்திர நாள் வந்தாலேயே, அமெரிக்க உளவுத்துறை அதைச் சொன்னது, இதைச் சொன்னது என்று சொல்லி, இந்திய மக்கள் அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப் போட்ட பாவத்திற்கு, உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை சோதனை செய்யப் படும் கொடுமையும் நடப்பதில் இருந்து,

"ஒரு வேளை 1947 ல் வெள்ளக்காரன்ட்ட இருந்து வாங்குன சுதந்திரத்த, அமெரிக்கன்ட்ட குடுத்துட்டானுவளா?"

0 comments:

Post a Comment