Friday, January 27, 2012

அரிசி..... அரிசி....அரிசி...!!!

முதல்வர் ஜெயலலிதா இலவச அரிசித் திட்டத்தை எளிமையான முறையில் தொடங்கி வைத்தார் எண்ற செய்தியை படித்ததும் எனக்கு மனதில் தோன்றிய எச்சரிக்கை மணி, "இந்த அரசாங்கமும் தன் முடிவை வெகு சீக்கிரமாக எளிமையான முறையில் தொடங்கி விட்டதோ" என்பதுதான் .


இந்த அரிசி கிலோ ஒரு ரூபாய்க்கு ரேஷனில் கொடுக்கப் பட்ட போதே, அதை வெட்கமில்லாமல் வாங்கித் தின்றவனே, "ஆமா இங்கே ஒரு ரூபாய்க்கு அரிசியைக் கொடுத்துட்டு வெளி மார்க்கெட்டில் 30 ரூபாய்க்கு ஏத்திட்டானுவல்ல" என்று பேசிய்தும் நம் காதில் விழாமல் இல்லை.


அப்போது வாங்கிய கால்வாசி பதியப்பட்டு, வாங்காத அல்லது ஸ்டாக் இல்லை என்று மறுக்கப்பட்ட, அல்லது நான் போடும் நாளில் நீ வரவில்லை என்று விரட்டப்பட்ட, அல்லது இதையெல்லாம் வாய் விளங்காதவன்தான் தின்பான். எனக்கென்ன வந்தது என தெனாவெட்டாக பேசி புறக்கணிக்கப்பட்ட முக்கால்வாசி நமக்குத் தெரிந்தே (அல்லது வேறு பொருள் வாங்கும்போது நமக்குத் தெரியாமலே) என்ட்ரி போடப்பட்டு லாரி லாரியாக கடத்தப்பட்டது.


தமிழ்நாட்டில் அரிசி ஐந்து வகையாக வழங்கப்படுகிறது. அல்லது விற்க, விநியோகிக்கப்படுகிறது.


1. மார்க்கட் அரிசி: இது மட்டுமே தரமானது என்ற நம்பிக்கை நமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே நமக்கு உண்டு. நல்ல அரிசி வாங்கணும்னா இருபது ரூபாய் வேணும். நயமான அரிசி வாங்கனும்னா முப்பது ரூபாய் வேணும் என்ற எண்ணமும் இன்றைய நிலையில் சகஜம்.


2. ரேஷனில் சாதாரண விலையில் போடப்பட்ட அரிசி.


3. கிலோ ஒரு ரூபாய்க்கு போடப்பட்ட அரிசி.


4. இருபது அல்லது முப்பத்தைந்து கிலோ இலவச அரிசி.


5. நோன்புக் கஞ்சிக்காக ரமளானில் அரசால் மானிய விலையில் கஞ்சி குடிப்பவர் எண்ணிக்கை அடிப்படையில் ஜமாத்துகளுக்கு தரப்படும் அரிசி.


எண் இரண்டு முதல் ஐந்து வரையிலான அரிசி பற்றிதான் இந்த அலசல்.