Saturday, October 30, 2010

"ஜம் ஜம்" நீர் தாய்மையின் சின்னம்!!!

ஐயாயிரம் (தோராயமாக) ஆண்டுகளுக்கு முன்....
பாரான் பள்ளத்தாக்கு எனப்படும் இன்றைய புனித மக்கா இருக்கும் பகுதியில் ஆள் அரவமற்ற நிலையில் கணவர் இப்ராஹீம் நபியால் விட்டுச்செல்லப்பட்ட ஒரு தாயும் மகனும்.
மகன் தாகத்திற்கு அழுகிறார். பச்சைக் குழந்தை அழுகுரல் எந்தத் தாயையும் பைத்தியமாக்கி விடும்தானே? சுற்று முற்றும் பார்க்கிறார்.
அதோ சபா மலைக் குன்றில் தண்ணீர் இருப்பது போல் தோற்றம்.
ஓடுகிறார்.
அது கானல் நீர்.
பக்கம் செல்லச்செல்ல அத்தண்ணீர் பார்வையில் இருந்து மறைய, மீண்டும் குழந்தையின் அழுகுரல் தாளாமல் மர்வா மலைக்குன்றை நோக்க, அங்கும் அதே கானல் காட்சி.
ஓடுகிறார்.
இல்லை.
மீண்டும் சபா. மீண்டும் மர்வா.
மொத்தம் ஏழு முறைகள்.
இதில் என்ன கொடுமை எனில் அந்த தள்ளாத வயதுக் கிழவி நடந்த போது அங்கே, நிழல் இல்லை. வெயிலோ உச்சத்தில். இரண்டு குன்றுகளுக்கும் இடையே, குழந்தையை பார்த்துக் கொண்டே நடக்கிறார். ஒரு நீண்ட பள்ளம் குறுக்கிடுகிறது. மேட்டில் இருக்கும் பிள்ளையை சீக்கிரம் காணும் ஆவலில் வயதை மீறி தள்ளாடித் தள்ளாடி ஓடுகிறார்.

ஏழு முறைகளிலும் இதே திரும்பத் திரும்ப. கொஞ்சம் யோசியுங்கள். உங்கள் அம்மாவும் உங்களின் மூன்று வயதுக்குள் இதே வடிவம்தான். பிள்ளை பெற்ற அம்மாமார்களை நீங்கள் கணவர்களாக இருந்தாலும், கவனித்ததுண்டா? பிள்ளை நடு நிசியில் அழுதால், எரிச்சல் பட்டு நீங்கள் கண்ணைத் திறக்கும் முன்பே பெற்றவள் உட்கார்ந்து அதை அமைதிப் படுத்துவதையோ, தொட்டில் ஆடிக் கொண்டிருப்பதையோ நீங்கள் காணலாம். பிள்ளைக்கு உடல் நிலை சரியில்லை எனில், அது சரியாகும் வரை, கடன் உடன் வாங்கியாவது குணப்படுத்தும் வரை உங்கள் மனைவி ஓய்வேடுத்ததுண்டா?

உங்களின் ஏழு கழுதை வயதில் காணும் இந்த மனைவிக்காக நீங்கள் பரிதாபப் பட்டதுண்டா? ஆம் எனில் நீங்கள் உங்கள் சிறு வயதில் இப்படித்தான் உங்கள் தாயை கஷ்டப் படுத்தி இருப்பீர்கள் நினைவில் கொண்டு வந்து, அவரையும் இரக்கக் கண்ணோடு நோக்குங்கள்.
கண்ணால் காணும் மனைவிக்கே . பரிதாபப் படாதவரா நீங்கள்? உங்களை ரோபாட் ஐ விட மோசமானவாக நான் மதிக்கிறேன்.

மீண்டும் வாருங்கள்.
அந்தத் தாய் ஹாஜிராவின் தள்ளாத வயது தியாகம் இறைவனால் மதிக்கப் பட்டது. அதனால்,
  • ஜம் ஜம் நீர் குழந்தைக்கும் தாய்க்குமாய் ஊற்றெடுக்கச் செய்தான்.
  • ஹஜ்ஜுச் செய்யும் பொது ஆணுக்கும் பெண்ணுக்கும் அந்த எழு ஓட்டத்தை (சயி) கடமை ஆக்கினான்.
  • அந்த ஏழு ஓட்டங்களிலும் ஆண்களுக்கு மட்டும் அந்த தாய் (ஹாஜிரா) பள்ளத்தில் ஓடிய இரண்டு மைல் பச்சை அடையாளம் இட்ட இடத்தில் கிழவி போலவே குலுங்கி குலுங்கி ஓடச் சொன்னான்.
காரணம் பெண்கள் பிள்ளை சுமப்பவர்கள். அவர்களுக்கு தாய்மை வலியை உணர்த்த வேண்டியதில்லை. ஆண்கள் மனைவிக்காக, சுகத்துக்காக, பொருளாதாரத்தை மிச்சப்படுத்த இப்படி பல காரணங்களால் தாயைப் புறக்கணிக்கிறார்கள். சபா மர்வா தொங்கோட்டம் ஆண்களுக்கு (சில பெண்களுக்கும்) தாய்மையை உணர்த்தும் பாடம். உங்களில் யாராவது ஹஜ் செய்தவர் அல்லது செய்த பெண் அம்மாவைப் புறக்கணிக்கிறார் என்றால் இது உறுதி,
அவர் ஹஜ் செய்யவில்லை. பிக்னிக் போய் வந்திருக்கிறார்.

0 comments:

Post a Comment