Saturday, October 23, 2010

இஸ்லாமியத் திருமணம் ஒரு பார்வை (பகுதி-1)

கே 1 : திருமணத்தின் நோக்கம் என்ன?
கற்பு நெறி காத்தல், இனவிருத்தியை ஆகுமான முறையில் நடத்துதல், சிறந்த சமுதாயம் உருவாக்குதல்.

கே 2 : இந்த நோக்கம் மனிதனுக்கு மட்டுமா?
ஆம். காரணம் மிருகங்களில் இனச்சேர்க்கை இயல்பானது. திட்டமிட்டதல்ல. முழுக்க முழுக்க இனவிருத்தி மட்டுமே நோக்கமாகக் கொண்டது.

கே 3 : திருமணம் என்ன மாற்றம் தருகிறது? (அல்லது) தர வேண்டும்?
திருமணம் பார்வையைத் தாழ்த்துகிறது. இன உறுப்புக்களை வரம்பு மீறாது பாதுகாக்கிறது.

கே 4 : திருமணம் செய்யாவிட்டால் (அல்லது) செய்து வைக்காவிட்டால்?
திருமண வயது வந்தப் பின் தன்னுடைய ஆண் அல்லது பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்காத பெற்றோருக்கு அப்பிள்ளைகள் வரம்பு மீறினால் ஏற்படும் தண்டனையில் முக்கிய பங்குண்டு.

கே 5 : உலகியல் திருமணம் எந்தெந்த காரணங்களுக்காக செய்யப் படுகிறது?
பணம், குடும்ப பெருமை, அழகு, (அதாவது மார்க்க பக்தி இவைகளின் கடைசி அம்சமாக்கியே உலகியல் திருமணம் நடை பெறுகிறது.)

கே 6 : இஸ்லாமியத் திருமணம் எதை பிரதானப்படுத்த வேண்டும்?
மார்க்க பக்தியுள்ள துணை அமைவதையே பிரதானப்படுத்த வேண்டும்.

கே 7 : அப்படியானால் மேற்கண்ட மூன்று விஷயங்களுக்காகவே திருமணம் செய்வதால் என்ன விளையும்?
பணத்துக்காக ஒரு பெண்ணை அல்லது மாப்பிள்ளையை முடித்தால், பணம் கரையும் வரை மட்டுமே குடும்ப பந்தம் அமைதியாக இருக்கும். பணம் இல்லையெனில் தைரியமாக முரண்பாடுகள் பேசப்படும். குடும்ப பெருமைக்காக மட்டும் திருமண செய்யப்பட்டால் ஏதேனும் விரும்பத்தகாத குற்ற நிகழ்வு அக்குடும்பத்தில் நிகழ்ந்தால் குடும்ப மரியாதை இழந்து மணபந்தம் முறியும் சூழல் எற்படலாம்.
அழகுக்காக திருமணம் நடைபெறும்போது, காலம் மாற மாற அழகின் டிகிரியும் மாறும் பேது, சலனங்கள் அக்குடும்பத்தில் சஞ்சலங்கள் ஏற்படுத்தலாம். ஆனால் மார்க்க பக்திக்காக திருமணத்தை பிரதானப்படுத்தினால் அதுவே நல்ல குடும்பப் பாரம்பரியத்தையும், முக வசீகரத்தையும், போதும் என்கிற மன செழுமையையும் தரும். எதை இழந்தாலும் இறைவன் நாட்டம் என ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். பணம் கரையும் வரை மட்டுமே குடும்ப பந்தம் அமைதியாக இருக்கும். பணம் இல்லையெனில் தைரியமாக முரண்பாடுகள் பேசப்படும். குடும்ப பெருமைக்காக மட்டும் திருமண செய்யப்பட்டால் ஏதேனும் விரும்பத்தகாத குற்ற நிகழ்வு அக்குடும்பத்தில் நிகழ்ந்தால் குடும்ப மரியாதை இழந்து மனபந்தம் முறியும் சூழல் எற்படலாம்.

கே 8 : நபிகளார் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் முன் திருமணங்கள் எந்த அடிப்படையில் நடந்தன?
நான்கு வகையான திருமணங்கள் நடந்தன. முதல் வகை ஒரு பெண்ணை திருமணம் முடித்தவன், முதலிரவில் தன மனைவியை ஊரிலேயே பலசாலியான ஒருவனின் படுக்கைக்கு அனுப்பி வைப்பான். அவன் அனுபவித்தப்பின் தன்னோடு சேர்த்துக் கொள்வான். காரணம், சண்டை போடும் பரம்பரைக்குணம் போய்விடக்கூடாது என்பதற்காகவும், பலசாலியான வாரிசு வேண்டும் (அறிவில்லாவிட்டாலும் கூட) என்ற மனப்பான்மையினாலும் தான்

கே 9 : இப்போது இந்த வகை திருமணத்திற்கு உதாரணம் உண்டா?
ஆம். சில நவீன நாகரிகம் பேசுவோர், தன கணவன் உயிரணுக்கள் செத்த பிரவியாயிருக்கின்றன என்று, எப்படியாவது குழந்தை உருவாக யாரோ ஒரு மனிதனின் சேமிக்கப்பட்ட விந்தணுக்களை தன கர்ப்பபைக்குள் செலுத்திக் கொண்டு குழந்தை பெருகின்றனரே அது.

கே 10 : இது இஸ்லாத்தில் ஆகுமா?
ஆகாதல்லவா? பச்சை விபசாரமாயிற்றே?!

கே 11 : விஞ்ஞானத்தால் முடியும் என நிரூபிக்கப்பட்டிருப்பதை நாம் மறுக்க முடியுமா?
மறுக்க முடியாது. அதற்காக ஏற்க முடியாதே.

கே 12 : அப்படியானால் எதை ஏற்கலாம்?
கணவனின் உயிரணுக்களை ஊசி மூலம் எடுத்து அவன் மனைவிக்கே செலுத்தி குழந்தை பெற வைக்கும் முறையை ஏற்கலாம் ஏனெனில் உறவு கொள்வதால் உயிருக்கு ஆபத்து என பயந்தால் அல்லது உயிரணுக்கள் பலமாய் உள்ள கணவன் உறவு கோள்ளும் போது உயிரணுக்கள் நீர்த்துப் போய் விடுவதை பயந்தால் ஒரு வேளை கூடலாம்.
ஆனால் கணவனின் உயிரணுக்கள் ஊசியில் சேமிக்கப்பட அவன் கிளர்ச்சி அடைய வேண்டும். அப்போதுதான் விந்தணுக்கள் சேமிப்பது சாத்தியம் என்றால் அதற்க்கு மனைவியுடனான உறவே பெட்டர். ஊசி மூலம் செலுத்தும் முறை ஆகாது. (ஐயோ! தலையே வெடித்து விடுகிறது) மொத்தத்தில் இறை நெறி ஒழுக்கத்திற்கு மாற்றமான எதுவும் ஹராம்தான்.

கே 13 : வாடகைத் தாய்மையை ஏற்கலாமா?
அதாவது ஒரு கணவனின் விந்தணுக்களையும் அவன் மனைவியின் கரு முட்டைகளையும் அந்த மனைவின் கர்ப்பப்பை குழந்தை சுமக்க முடியாத பலவீன நிலையிலுள்ளது என்பதற்காக பலமான கர்ப்பப்பை உள்ள பெண்ணுக்குள் செலுத்தி அவளை சுமக்கச் செய்து குழந்தை பெற வைப்பது, இதை விஞ்ஞான வளர்ச்சி என்பதை விட, விபச்சாரத்தின் வளர்ச்சி எனலாம். காரணம், கர்ப்பத்தில் சுமக்கும் பெண்ணின் அத்தனை குணங்களையும் தன வடிவாகப் பெரும் அக்குழந்தை எப்படி அந்த பிள்ளையில்லாத தாயின் பிள்ளையாகும்? வேண்டுமானால் உயிரணு கொடுத்த கணவனின் வைப்பாட்டியின் (வாடகைத் தாயின்) பிள்ளை என்று சொல்லலாமா?
இதற்கு அந்த வாடகைத் தாயையே திருமணம் செய்து குழந்தை பெறலாமே? விபரீதம் என்னவென்றால், ஒரு திருமணத்திற்கு மேல் செய்யாமல் இருப்பவனும் உத்தமனாம். இப்படி வாடகைத் தாய்மைக்காக தன உயிரணுக்களை இரண்டாவது மற்றும் மூன்றாவது பெண்ணுக்குள் விஞ்ஞானத்தின் பெயரால் செலுத்துபவனும் உத்தமனாம்!
தன் கர்ப்பப்பையை பல பேருக்கு வாடகைக்கு விடுபவள் பத்தினியாம். ஆனால் பல பேருடன் உறவு கொள்பவள் விபச்சாரியாம்! (என்ன! தலை சுற்றுகிறதா? ) இதுதான் இறை நெறிக்கு மாறான விஞ்ஞான வளர்ச்சி.

(இன்னும் ....... 2 ம் பகுதியில்)

0 comments:

Post a Comment