Tuesday, October 26, 2010

இஸ்லாமியத் திருமணம் ஒரு பார்வை (பகுதி-2)

கே 14 : அறியாமை கால இரண்டாம் வகை திருமணம் எப்படிப் பட்டது?
இது பெண்ணின் சாய்ஸ். ஒரு பெண் பல பேரிடம் தப்பாக நடப்பாள். தனக்கு ஒரு துணை போதும் என்ற நினைப்பு வரும் போது, அவர்கள் அனைவரையும் பஞ்சாயத்திற்கு அழைத்து, பொது மக்களுக்கு முன், "இவன் தான் என் வயிற்றுக் குழந்தைக்கு தகப்பன்" என்பாள். எல்லோரும் சேர்த்து (ஆவலுடன் தப்பாக நடந்தவர்களும் சேர்த்து (அப்பாடா! தலை தப்பித்தது!) ) அவனுடன் அவனை இணைத்து விடுவர்.

கே 15 : இதில் மற்றவர்கள் வெட்கப்பட மாட்டார்களா?
ஊரே அந்த மனநிலையில் இருக்கும்போது வெட்கப்பட என்ன இருக்கிறது? நம்முடைய காலத்தவர்கள் வாடகைத் தாய்மையை, சினிமாக்களிலும் சீரியல்களிலும், டாக்டர்களின் டாக் ஷோக்களிலும் சத்தம் போட்டு நியாயப் படுத்தவில்லையா? யார் வெட்கப் பட்டார்கள்? அது மாதிரிதான் இதுவும்.

கே 16 : இந்த வகை திருமணம் இப்போது நடைபெறுகிறதா?
பெரும்பாலும் அடங்காமல் நடக்கும் பெண்கள், (அந்த பலகீனத்தை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி சீரழிக்கும் ஆண்களுடன் தப்பாக நடந்து) என்றாவது கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும்போது. அதற்கு முன் அவளுடன் இருந்தவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கடைசியாக மாட்டியவனுடன் சில பஞ்சாயத்துக்களே அவளை சேர்த்து வைத்து விடுகின்றன.

கே 17 : அடுத்த வகை திருமணம் எப்படிப் பட்டது?
அதே போன்று பல பேரிடம் தவறாக நடக்கும் பெண், குழந்தை உருவாக்கி அதை பெற்றெடுத்தப் பின் தன்னிடம் தவறாக நடந்தவர்களையும், சாமுத்திரிகா லட்சணம் என்னும் ஜாடை அடையாளம் சரி காணும் நபரையும் அழைப்பாள்.
அவனிடம் அந்த ஆண்களை காட்டி, இவனில் யாருக்கு இக்குழந்தை பிறந்துள்ளது? என கேட்டு, அவன் கை காட்டும் நபரை மற்றவர்கள் துணையுடன் திருமணம் செய்து கொள்வாள்.

கே 18 : இத்திருமண முறை இப்போது நடைபெறுகிறதா?
ஆம். பழங்குடியினர் என்று அழைக்கப்படும் ஆதிவாசிகளில் சிலரிடம் சமுதாய அமைப்பிலேயே இப்படி நடைபெறுவதாக செய்திகள் சொல்கின்றன.

கே 19 : மேற்கண்ட மூன்று முறைகளில் திருமணம் செய்தவர்களிலும் நல்லவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?
எப்படி இருக்க முடியும்? “விபச்சாரி, விபச்ச்சரகனைத் தவிர மற்றவர்களை திருமணம் செய்ய மாட்டாள். இது போலவே ஒரு விபச்சாரகன் விபச்சாரியைத் தவிர மற்றவர்களை திருமணம் செய்ய மாட்டான்” என அல்லாஹ்வே குர் ஆனில் தெளிவாக்கிய பிறகு, எப்படி அவர்களில் நல்லவர் இருக்க முடியும்?

கே 20 : நான்காவது வகைத் திருமணம் எப்படிப்பட்டது?
அது இப்போதைய திருமணம் போன்ற ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளையையோ, ஒரு மாப்பிள்ளைக்கு பெண்ணையோ பேசி,, இரு வீட்டாரும் கலந்து செய்யும் திருமணங்களும் வழக்கத்தில் இருந்தன. இஸ்லாமிய நெறியுடன் பின்னாளில் தங்களை இணைத்துக்கொண்ட அனைத்து தோழர்களின் திருமணங்களும், இஸ்லாம் வருவதற்கு முன்பே அப்படித்தான் நடந்திருந்தன. நபிகள் நாயகத்தின் முதாதையர் அத்துனைப் பேரின் திருமணங்களும் இப்படித்தான் நடந்திருந்தன.

கே 21 : இஸ்லாமியத் திருமணத்திற்கு தேவையானவை என்னென்ன?
மாப்பிள்ளை, பெண், பெண்ணின் பொறுப்பாளர் பெண்ணின் தகப்பனார் அல்லது சகோதர்கள் (இவர்களில் யாரும் உயிருடன் இல்லையெனில் அப்பெண்ணின் போஷகர்) இரண்டு சாட்சிகள், நடத்தி வைப்பவர் (காழீ) பெண்ணின் பொறுப்பாளர் விபரமானவராக இருப்பின் இப்பொறுப்புக்கு அவரே போதும். இக்காலத்தில் திருமண வாழ்க்கையின் நீளம் கம்மியாகிக்கொண்டே வருவதால் காழீ (நடத்தி வைப்பவர் அவசியமாகிறார்

கே 22 : இதற்கு முன்னுதாரணம் உண்டா?
ஆம். ஆரம்பத்தில் சஹாபாக்களின் திருமணங்கள் கூட நாலாம் பேருக்குத் தெரியாமல் நடந்ததுதான். இன்னொருவருக்கு பெண் பேச அனுப்பி வைக்கப்பட்டவரே, வீட்டுக்குள்ளிருந்து மாப்பிள்ளையாகத் திரும்பி வந்து முதலில் பெண் பேசப்பட்டவரிடம் வாழ்த்துப் பெற்ற சம்பவங்களும் உண்டு.
இரவில் திருமணம் முடித்து பகலில் ரசுலுல்லாஹ்விடம் அதை செய்தியாகத் தெரிவித்த சஹாபிகளும் உண்டு. பின்னாளில்தான் திருமணத்திற்க்காக அழைப்பு விடுத்துக் கொள்ளுங்கள். தப் அடித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் திருமண சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள அனுமதித்தார்கள்.
(இந்தப் பகுதி என் மகள் பாத்திமா புஷ்ரா டைப் செய்தது)
....................... இனி இன்ஷா அல்லாஹ் 3 ம் பகுதியில்

1 comments:

SHAHUL HAMEED said...

salam asrath insa allah ithaipol innum athikam eluthngal irivan thunai ierupan by rahim raja

Post a Comment