Tuesday, October 1, 2013

சாதனை!!! சாதனை!!



படிக்க மறக்க வேண்டாம் :

*
ஆர்.எஸ்.எஸ் காரர் வல்லபாய் பட்டேலை காங்கிரசுக்குள் அனுப்பி, சூழ்ச்சியால் நாட்டையே பிரித்தார்கள்.

*
காந்தியை கொன்று முஸ்லிம் மீது பழி போட்டார்கள்.

*
காமராஜரை உயிரோடு எரிக்க முயன்றார்கள்.

*
நாடு முழுவதும் கலவரங்களை நிகழ்த்தி சமூகத்தை கூறு போட்டார்கள்.

*
நரசிம்மராவ் என்ற ஆர்.எஸ்.எஸ் காரரை காங்கிரசுக்குள் ஊடுருவ விட்டு பாபர் மஸ்ஜிதை இடித்தார்கள்.

*
கோத்ராவில் ரயிலுக்கு தாங்களே தீ வைத்து விட்டு கலவரம் செய்தார்கள்.

*
அஜ்மீர், புனே, மாலேகான் என நாடுமுழுவதும் குண்டு வைத்துவிட்டு இந்தியன் முஜாகிதீன் என்றார்கள்.

*
தென்காசியில் தங்கள் ஆபீசில் தாங்களே குண்டுவைத்து மாட்டிக் கொண்டார்கள்.

*
திண்டுக்கல்லில் தங்கள் வீட்டில் தாங்களே குண்டுவீசி பிடிபட்டார்கள்.

*
ஆடிட்டர் ரமேசை கொன்றது யார் என்றே விசாரணையில் தெரியாத போதும் முஸ்லிம்தான் கொன்றான் என்றார்கள்.

*
சீனாவில் உள்ள ஹைடெக் தெருவைக் காட்டி இது மோடியின் அகமதாபாத் என்றார்கள்.

*
அமிதாப் மோடிக்கு ஆதரவாக பேசினார் என்று கிளப்பி விட்டு பின்னர் அமிதாப் மறுத்தவுடன் திருதிருவென முழித்தார்கள்.

*
அமேரிக்காகாரன் சிலரை அழைத்து மோடியை சந்திக்க வைத்து இதோ விசா தந்துவிட்டார்கள் என்று பரப்பினார்கள்.

*
இங்கிலாந்திலிருந்து அழைப்பு வந்தது என்று கதை விட்டார்கள். இரண்டையுமே அந்த நாடுகள் மறுத்ததும் ஓடி ஒளிந்தார்கள்.

*
கரன் தாப்பரின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அவர்களின் இரும்பு மனிதர் மோடி துருபிடத்த பழைய இரும்புச் சாமான் போல திருட்டு முழி முழித்ததை மறந்து விட்டு கரன் தாப்பர் மீதே குற்றம் சுமத்தினார்கள்.

*
வன்சார கடிதத்திற்கு இன்னும் முழிக்கும் இந்த கூட்டம் ஊரே கைகூப்பி சிரிக்கிறார்கள்

*
எப்பப்பா மோசடியின் மொத்த உருவமே இந்துத்துவ மதவெறிக் கூட்டம் தான்...


நன்றி :Yousuf Riaz

ஹஜ் ஒரு இனிய குடும்பத்தின் நினைவு



வாழ்கிறோம் ஒரு மாதிரியாக! காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நெறியற்ற முறையில். அம்மா அழைக்கிறார், “மகனே! எனக்கொரு உதவி. செய்வாயா?” அப்பீலே இல்லாமல் மறுக்கிறோம், “உனக்கு வேறு வேலை இல்லை?” மனைவியைக் கேட்கிறோம், “ஏம்மா! மகனை எங்கே?” மனைவி மறுவினாடி சொல்கிறார், “அவன் எங்கே போகிறான். என்ன செய்கிறான். யாருக்குத் தெரியும்?”
மகனை ஏவுகிறோம், “மாலைக்குள் அரசுக்குக் கட்ட வேண்டிய வரிகளை கட்டிவிட்டு வந்து விடுமகன் உடன் மறுக்கிறான், “நீ போகிற வழியில் தானே இருக்கு. கட்டிட்டா என்ன?” அம்மா மகளைக் கேட்கிறாள், ”எம்மா! சோத்துப் பானையிலே வெந்துருச்சான்னு ஒரு பார்வை பாருமகள் நாவல் படிக்கும் சுவாரசியம் கெட்டுப்போன் அதிருப்தியில், “ஏம்மா! நான் சும்மா இருக்கிறது மட்டும் தான் உன் கண்ணுக்குத் தெரியுமா?”.
என்ன ஒரு வாழ்க்கை! யாருக்கும் யாரும் கட்டுப்படாத, யாரும் யார் சொல்லையும் மதிக்காத குடும்பம், சமூகம், உறவுகள் என என்ன மாதிரியான வாழ்க்கை?
இந்த வாழ்வில் இருந்து கொண்டே ஹஜ்ஜுப்பயணம் மேற்கொள்ளும் நாம், கஃபாவைப்பார்க்கிறொம், “ஆஹா! இது தன்னை சரியாக வளர்த்த ஒரு தவறான வளர்ப்புத்தந்தைக்காக அல்லாஹ் தடுக்கும் வரை பாவ மன்னிப்புக்கேட்ட மகன் இப்ராஹீம் (அலை) நின்ற இடம் இல்லையா? தந்தைக்குப்பணிந்த மகனும், மகனை நல்லவனாகச் செதுக்கி வளர்த்த தந்தையும், கொத்தனாக, கையாளாக  நின்று கட்டிய ஆலயமல்லவா?” நினைவு வருகிறதா?
வானுயர்ந்த கட்டிடங்களையும் மீறி, வானம் பார்த்த கட்டாந்தரைகளும் கண்ணுக்குத் தென்படுகிறதா? ”இங்குதான் ஒரு அம்மா எங்கேயோ இருக்கும் தன் கணவனின் கனவுகளையும், வமிசப்பாரம்பரியத்தையும் உள்வாங்கி, அவர் தந்த குலக்கொழுந்தாம் மகனை அவர் குணத்துடனே பார்த்து பார்த்து வளர்த்த அன்னை ஹாஜராவும், மகன் இஸ்மாயீலும் கொதிக்கக் கொதிக்க வளர்ந்த பூமியல்லவா?”  நினைவுக்கு வருகிறதா?   
அரஃபாவில் நிற்கிறீர்கள். இது உன்னை அல்லாஹ்வுக்காக பலியிடப்போகிறேன்என ஒரு தந்தை சொன்னதும், “என்னையா? யாரைக்கேட்டீர்கள்? உங்களுக்கு இரக்கம் இல்லையா? நான் வாழ வேண்டும் என்ற எண்ணமில்லையா? என்ன வகையான தகப்பன் நீங்கள்?” என்று கேட்க அல்ல, முணுமுணுக்கக் கூட செய்யாமல், “அல்லாஹ் சொன்னால் செய்ய வேண்டியதுதானே தவிரஎன்னைக்கேட்க என்ன இருக்கிறது?” என்று போட்டி போட்டு இறையச்சத்தில் மிகைத்து நின்ற தந்தை இப்ராஹீமும், தனையன் இஸ்மாயீலும் பொறுமை காத்த பலிபீடமல்லவா இது?” நினைவு வருகிறதா?
ஜம்ராவைப் பார்க்கிறீர்கள். மகனை பலியிட தந்தை அழைத்துச் சென்ற போது, பாசத்தைக்காட்டி அம்மாவையும், பரிதவிப்பைக்காட்டி தகப்பனையும், பாரின் வனப்புகளை பார்க்காமல் பரிதாபமாக செத்துப் போகப் போகிறாயா? என்று மகனையும் சீண்டிப்பார்த்த ஷைத்தானை அம்மா, மகன், தந்தை என மூவரும் கல்லால் விரட்டி விரட்டி அடித்தது நினைவுக்கு வருகிறதா?
வரும். வர வேண்டும்.
போய் விட்டு வந்த பிறகாவது உங்கள் குடும்பம் அந்த அன்னை போன்ற, அந்தத் தந்தை போன்ற, அந்த மகன் போன்ற குடும்பமாக இறையச்சத்தில், ஒருவருக்கொருவர் விரும்பும் விதத்தில் மாற வேண்டும். இல்லையேல் ஒரு கெந்திங் போவது போல ஒரு மலாக்கா போவது போல உங்கள் ஹஜ்ஜும் ஒரு சுற்றுலாதான்.
சந்தேகமில்லை.
ஈதுல் அள்ஹா முபாரக்!

இறை விருந்தினர்களே!



ஹஜ்ஜுப் பயணம் செல்லும்
ஹக்கனின் தூதர்களே!
ஹாஜியாகித் திரும்பப் போகும்
ஹக்கான எண்ணங்களே!
விமானப் பயணத்திலிருந்து
விரைந்து காணப்போகும்
விந்தையாம் கஃபா வரை
விதவிதமாய் விரியும் கனவுகள்,
வெள்ளுடை தரித்த முதல்
வேந்தன் ஆலயம் தரிசிக்கும் வரை
வேகாத ஆவல்கள்
வேண்டாத ஆசைகள்!
உள்ளம் குளிர்ந்து
உவகை சுமந்து
உலகமே கிடைத்தாற்போல்
உல்லாசம் சுமக்கும் நாளது!
கஃபாவில் பத்தியமாய்
கால் முதல் அரை மாதம்,
மினாவில் கால் பதித்து
மின்னலென ஐவேளை
அரஃபா கண்டு ஒரு
அரை நாளின் சஙகமம்
முஸ்தலிஃபா மீண்டு ஒரு
முழு இரவு தரிசனம்
சாத்தானை கல்லாலடித்து
சாக்கடைகள் மனம் நீக்கி
மிச்ச மீதி கடமைகளை
மிதமாக நிறைவேற்றி
அண்ணலெம் பெருமானின்
ஆத்மார்த்த தரிசனத்தை
ஆழ்மனத்தில் உள்வாங்கி
அழுதழுது நினைந்துருகி
ஆகாயம் உமைப்போற்ற
அகிலமே புகழ் தூவ
அல்லாஹ்வின் அருள் பெற்று
அன்னையகம் மீளப்போகும்
அன்பு மிக்கீர்!
வாரிடுவீர் நன்மைகளை
வாழ்ந்திடுவீர் வளங்களுடன்
வாழ்த்துகிறேன் வாயாற!
வாழ்க! வாழ்க! இறை விருந்தினர்களே!