Wednesday, November 3, 2010

ஆர்னிகா நாசர் - எந்திரன் கதை ஒரு விளக்கம்

ஆர்னிகா நாசர் 1985 களின் தமிழ் நாவல் ரசிகர்களுக்கு அறிமுகமான சயின்ஸ் பிக்ஸன் எழுத்தாளர்.

சுஜாதாவுக்கும் இவருக்கும் சயின்ஸ் பிக்ஸன் கதைகளில் உள்ள வித்தியாசம். சுஜாதா ஐ.டி சம்பந்தப்பட்ட ஜீனியஸ் என்பதால் கம்பியூட்டர் என்பதே தெரியாத காலத்தில் 1975 க்கு மேற்பட்ட ஆண்டுகளில் அந்த டெக்னாலஜியை தமிழனின் மூளைக்குள் திணிக்க எளிய வழியாக கதை எழுதும் உத்தியை பயன்படுத்தியவர். அவரின் கதைகளை இதை படித்தபின் மீண்டும் படியுங்கள். விளங்கும். ஏற்கனவே இருக்கும் கம்பியூட்டர் அதிசயங்களை புரியாதவனுக்கு புரிய வைத்தவர்.

ஆர்னிகா நாசர் அந்த நேரத்தில் சுஜாதாவை விட அட்வான்சாக 2020 களின் கம்பியூட்டர் எப்படி இருக்கும்? என்பதை அவர் கதைகளில் புகுத்தியதால் சுஜாதாவாலேயே நேரடியாகப் பாராட்டுப் பெற்றவர்.

அப்படி சிந்தித்து, எழுதி, வெளிவந்த மாலைமதியின் வெளியீடான "ரோபாட் தொழிற்சாலை" தான் இன்றைய இந்திரன் படக்கதை. மேற்கண்ட எழுத்துக்களை மீண்டும் படித்துப் பாருங்கள். ஒரு உண்மை விளங்கும். எந்திரனில் கூட "இந்த டெக்னாலஜி இன்னும் பத்து வருடத்துக்குப் பின் வேண்டுமானால் தேவைப் படலாம்" என்று நீதி மன்றம் கூறுவதை ஆதாரமாகக் கொள்ளலாம்.

நான் சினிமா ரசிகன் அல்லது எதிர்ப்பாளன் அல்ல. இன்றைய தமிழ் சினிமா ஆபாசக் களஞ்சியம் என்ற கருத்துக் கொண்டவன். சினிமாவைக் கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் இன்றிருந்தால் கோலிவுட், ஹாலிவுட், டோலிவுட், பாலிவுட் எல்லாமே ஆபாசத்தின் எல்லையையும் தாண்டிப் போவதைப் பார்த்து, ஜெலட்டின் குச்சியை ஆக்க சக்திக்காக கண்டு பிடித்த ஆல்பிரட் நோபிள், அது அழிவு சக்திக்கு பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டவுடன் நொந்து நூலாகி, அதற்கு வந்த ராயல்டியைக் கொண்டு நோபல் பரிசு கொடுக்கும் டிரஸ்ட் ஆரம்பித்தது போல் எதையாவது செய்திருப்பார்.
பாவம். இன்றைய ஆபாச சினிமாக் காரனும், அதற்கும் வக்காலத்து வாங்கி, கூத்தாடிகள் என்பதை கலைஞர்கள் என்று பாலிஷ் பண்ணிப் பேசும் மெத்தப் படித்தவர்களும் அவர் (தாமஸ் ஆல்வா எடிசன்) இறக்கும் வரை பிறக்கவில்லை.. இருந்தாலும் அவரின் கண்டுபிடிப்பையே திருடி இருப்பார்கள்.

அது மட்டுமல்ல, காப்பி ரைட் என்ற ஒரு விஷயம் எழுத்துலகிலும் சினிமா உலகிலும் அரசாங்கத்தால் கடுமையாக்கப் பட்டிருந்தும்,
எழுத்துலகில் மட்டும் அச்சட்டத்தை உயிரோடு விட்டு வைத்திருக்கிறார்கள்.
சினிமா உலகத்தில் ஒவ்வொரு படமும் மினி மாபியா கேங் உதவியுடன்தான் வெளி வருகிறது. என்ன, மினி பட்ஜெட் படம் மினி மாபியா என்றால், பெரிய பட்ஜெட் பெரிய மாபியா. அவ்வளவுதான். இதில் 300 கோடி இந்திரன் எனும்போது, ................ அப்பப்பா, தலை சுற்றுகிறது. இண்டர்நேசனல் பணக்காரர்களையும் மிஞ்சிய இந்த கூட்டத்திடம் ஆர்னிகாவுக்கு என்ன நீதி கிடைக்கும்? பொறுத்திருப்போம்.

ஆர்னிகாவுக்கும் எனக்கும் என்ன?

ஆர்னிகா இன்று தலை சிறந்த இஸ்லாமிய கதை நாவல் எழுத்தாளர். எங்கள் வட்டத்து நெருங்கிய நண்பர். அவர் வீட்டு திருமணத்தில்தான் ஜி. அசோகன், தினமலர் அந்துமணி, உள்ளிட்ட ஏராள பிரமுகர்களின் அறிமுகம் கிடைத்தது.
சமுதாய எழுத்தாளர் என்ற பாசத்தில்தான் இந்தப் பதிவு.

கடைசி செய்தி: தினமலர் அந்துமணி பற்றி.....ஒரே ஒரு கருத்து. அதுவும் அவரைப் பார்த்த பின், அவரைப் பற்றி ஆர்நிகாவிடம் கேட்ட பின் .......

பழனி பாபா சொல்வார்,
"என்னை ஆத்திரத்தோடு பார்க்காதீர்கள். என்னுடைய நல்லது உங்களுக்குத் தெரியாது.
என்னை அனுதாபத்தோடு பார்க்காதீர்கள். என்னுடைய கெட்டதுகள் உங்களுக்குத் தெரியாது"

அந்துமணியை நாம் பார்க்கிற பார்வைக்கும் இது பொருந்தும்.

0 comments:

Post a Comment