Tuesday, November 2, 2010

இஸ்லாமிய திருமணம் ஒரு பார்வை (பகுதி 3 )

கே 23 : ஸஹாபாக்களுடைய திருமண முறையே நன்றாக இருக்கும் பொது எதற்க்காக நாயகம் (ஸல்) திருமணத்தை பகிரங்கப்படுத்த அனுமதித்தார்கள்?
ஸஹாபாக்கள் காலத்தில் திருமண பந்தத்திற்கென ஒரு மரியாதை இருந்தது. ரசூலுல்லாஹ் வாழ சொன்னபடி வாழ வேண்டும் என்கிற பக்தி இருந்தது. எனவே அன்றைய திருமண பந்தங்களுக்கான ஆயுட்காலமும் நீளமாக இருந்தது.
இன்றய திருமணங்களின் ஆயுள்,
உன்னைக் கண்டேன்
என்னை மறந்தேன்.
உன் தங்கையைக் கண்டேன்,
உன்னை மறந்தேன்.
என்கிற அலைபாயும் மன நிலையிலும்,
காலையில் அவர்கள் கண்கள் சந்தித்தன(காதல்)
மதியம் அவர்கள் கைகள் சந்தித்தன(திருமணம்)
மாலையில் அவர்கள் வக்கீல்கள் சந்தித்தார்கள் (விவாகரத்து)
என்கிற அவசர மனநிலையிலும் மனிதர்கள் மாறிப்போனதால், அப்படிப் போவார்கள் என நாயகம் (ஸல்) யூகித்ததாலேயே மிகப்பெரும் சாட்சியான அழைப்பை அவசியமாக்கினார்கள்.

கே 24 : திருமணத்தை பகிரங்கப் படுத்துங்கள் என்ற ஹதீஸ் திருமணத்தன்று போடப்படும் விருந்தை அவசியமாக்குமா?
ஆம். நிச்சயமாக.

கே 25 : இல்லையாமே? திருமணம் முடித்து முதல் இரவும் கழிந்தபின் மணமகன் கொடுக்க வேண்டிய வலீமா விருந்துதான் இஸ்லாமில் உள்ளது என்றும், மணமகள் வீட்டில் கொடுக்கும் விருந்து இஸ்லாமில் இல்லாதது என்றும் கூறி, சில நபர்கள் தங்கள் த்கிருமனத்தில் விருந்து கொடுக்காமல், "நாளை என் வீட்டில் வலீமா விருந்து உள்ளது" என அனுப்பி விடுகின்றனரே?
இது ஆரம்ப காலத்தில் சரியாக இருக்கலாம். ஆனால் எப்போது திருமண அழைப்பை ரசூலுல்லாஹி (ஸல்) ஆகுமாக்க்னார்களோ, அப்பொழுதே வந்தவர்களுக்கு உணவு ஏற்பாடும் செய்ய வேண்டும் என்பதை சாதாரண புத்தியுள்ளவன் கூட புரிய வேண்டும். விருந்தோம்பலை இஸ்லாமியரின் இயல்பாக பெருமானார் சொல்லித் தந்த பின் இந்தக் கேள்வியே அபத்தம்.
ஒரு சிலர் பெண் வீட்டில் நிபந்தனையிடும்போதே கல்யாணத்தன்று இத்தனை பேர் சாப்பிட வருவோம் என்று கூறுகின்றனர். இந்த நிபந்தனை வரதட்சணையில் சேர்த்தி. மாற்றமாக, உங்கள் சார்பில் எத்தனை பேர் வந்தாலும், வரவேற்கத் தயாராக இருக்கிறோம். சிரமமில்லை என்று பெண் வீட்டாரே சொன்னால் குற்றமில்லை.
ஏனெனில் திருமணம் பெண் வீட்டில் நடைபெறுவதால், அவர்கள் சார்பில் விருந்து வைப்பதை அவர்கள் விரும்பினால் மார்க்கம் தடுக்கவில்லை. மற்றபடி மாப்பிள்ளை வீட்டார் சாப்பாட்டுக்கு டிமாண்ட் செய்வதை மனிதாபிமானமல்ல என்பதை விட வேறு வார்த்தை சொல்ல முடியவில்லை.
இப்போதெல்லாம் ஒரே ஊர் மாப்பிள்ளை பெண்ணாக இருந்தால் கல்யாணத்தன்று தனித்தனியாக இருவர் வீட்டிலும் விருந்து நடைபெறுவதும், எல்லா சொந்தங்களும் இரு குடும்பத்துக்கும் பொது என்றால், இரண்டு நாட்கள் வைத்து இருவர் வீட்டிலும் சாப்பாடு நடைபெறுவதும் வாடிக்கையாகி விட்டது.
அது போன்றே வெவ்வேறு சொந்தங்கள் எனிலும் இருவரும் ஒரே இடத்தில் வைக்கும் விருந்துச் செலவை ஷேர் பண்ணிக் கொள்வதும் சகஜமாகி விட்ட பிறகு, இதை பெரிய பிரச்னையாக்கி மார்க்கத்தில் டென்ஷன் ஏற்ப்படுத்த வேணடியதில்லை.
இதற்கெல்லாம் மேலாக மறு வீட்டுச் சாப்பாடு என்ற பெயரில் முதலிரவு முடிந்த மறுநாள் நபிவழியின் அடிப்படையில் மாப்பிள்ளை வீட்டுச் சாப்பாடு இருப்பதை இந்த நூதனர்கள் சிந்திக்க மறந்து விடுகின்றனர்.

கே 26: திருமண மாப்பிள்ளை பெண்ணுக்கு, திருமணப்பெண் மாப்பிள்ளைக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது?
மாப்பிள்ளை பெண்ணுக்கு மஹர் கொடுக்க வேண்டும். பெண் அவளே புகுந்த வீட்டுக்கு தன்னையே அதிர்ஷ்டமாக கொண்டு போகும் பொது வேறெதுவும் தேவையில்லை. மாப்பிள்ளை எள்மையானவராக இருந்து, அவரின் நற் குனத்துக்காகவே பெண்ணை கொடுத்து மாப்பிள்ளைக்கான தனியிட வசதிக்கென பெண்ணை பெற்றவரோ வலீ (பொறுப்பாளர்) காரரோ சில ஏற்பாடுகளை, அன்பளிப்பு களை செய்தால் மறுக்க வேண்டியதில்லை.

கே 27 : இதற்கு முன்னுதாரணம் உண்டா?
ஆம். அன்னை ஆயிஷா நாயகியை ரசூலுல்லாஹி (ஸல்) திருமணம் செய்த பின் ஆயிஷாம்மா தகப்பனார் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில் பல நாள் கழிந்து ஒருநாள் அபூபக்கர் (ரலி) ரசூலுல்லாஹ்விடம்,"யா! ரசூலுல்லாஹ்! ஆயிஷாவை குடும்பம் நடத்த அழைத்துக் கொள்ளவில்லையா?" என வினவ,
"குடும்பம் நடத்தத் தேவையான பொருட்களை நான் பெற்றுக் கொள்ளாத நிலையில் எப்படி அழைத்துக் கொள்வது?" என நாயகம் (ஸல்) சொல்ல, அபூபக்கர் சித்திக் (ரழி) அவர்களே வீட்டிற்குத் தேவையான சில பொருட்களை தயார் செய்து தர, அதன் பிறகு, நபிகளாரின் இல்லறம் ஆயிஷா அம்மாவுடன் ஆரம்பமானது.
எனவே, மாப்பிள்ளைக்கு பணம் உட்பட எதுவும் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் பெண் வீட்டுக்கு இல்லை. ஆனால் அன்பின் அடிப்படையில் மாப்பிள்ளைக்கு கொடுக்கப்படுவதை மறுக்க வேண்டியதில்லை என்பதையே இதன் மூலம் பார்க்க வேண்டுமே தவிர, "அவர்களே வாங்கியிருக்கிறார்கள்" எனப் பேசுவதும் அறிவீனம்.
(இன்னும் இன்ஷா அல்லாஹ் 4 ம் பகுதியில்)

0 comments:

Post a Comment