Tuesday, November 5, 2013

ஏன் இந்த பில்டப்! ஏன் இந்த பித்தலாட்டம்


oct 04/2013: ஒரு வழியாக நரபலி மோடி குறித்து காவிகளும், மீடியாக்களும் கொடுத்த பில்டப்கள் கடந்த 26.09.13 வியாழன் இரவோடு மோடி மாநாடு முடிந்ததோடு முடிவுக்கு வந்தது. 

மோடியின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முப்பதாயிரம் பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள்; நாற்பதாயிரம்; ஐம்பதாயிரம் என்று சொல்லிக்கொண்டே போய் கடைசியில் ஒரு லட்சமாகி அது இறுதியில் ஒன்றரை லட்சம் பேரில் வந்து நின்றது. ஒன்றரை லட்சம் பேர் ரூ10 கட்டணமாகக் கட்டி ஆன்லைன் வாயிலாகப் பதிவு செய்துள்ளார்கள் என்று மோடி மஸ்தான் வேலையை காவிக் கயவர்களோடு சேர்ந்து கொண்டு மீடியாக் கயவர்களும் அரங்கேற்றினர். 

ஆனால் வந்த கூட்டத்தின் அளவு என்ன? சுமார் 15ஆயிரத்திற்கு நெருக்கமான அளவிலான இருக்கைகளே வாடகைக்கு எடுக்கப்பட்டு அதிலும் அந்த இருக்கைகளும் கூட முழுவதுமாக நிரப்ப வழியில்லாமல் பல இருக்கைகள் காலியானதாக இருந்ததும், அந்த இருக்கைகளையும் மாநாட்டுத் திடலை நிரப்பும் அளவிற்கு போட்டாக வேண்டும் என்ற அடிப்படையில் மிகுந்த டைவெளிவிட்டு போட்டு, அவைகளுக்கு மத்தியில் பெரிய அளவிலான இடைவெளிவிட்டு மாநாட்டு திடலை இருக்கைகளால் நிரப்ப படுபிரயத்தனம் எடுத்துள்ளது காவிக்கூட்டம் என்பது அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவைக் காணும்போது நன்றாகத் தெரிந்தது. 

கூட்டம் கூடியது போல காட்டுவதற்காக எவ்வித மாயா ஜாலங்களை எல்லாம் காட்டுவதற்கு இவர்கள் முயற்சித்துள்ளார்கள் என்ற விஷயம் இதன் மூலம் அம்பலத்திற்கு வந்தது. அடுத்ததாக கூடிய கூட்டம் குறித்து மீடியாக்கள் காவிக் கயவர்களுக்கு ஆதரவாக ஜால்ரா தட்டினர். ஆரம்பத்தில் இரண்டு லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறியவர்கள் மறுகணமே சில நிமிடத்துளிகளில் நாலரை லட்சம் பேர் கூடியதாக நாக்கூசாமல் புளுகித் தள்ளினர். உத்தரகாண்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் மக்களை பத்து டாடா சுமோ காரில் போய் காப்பாற்றியதாக கதை விட்ட இந்தக் கயவர்களுக்கு பத்தாயிரத்தை நாலரை லட்சமாகச் சித்தரிப்பது சின்ன விஷயம் தான். 

ரஜினி காந்த் தனது ரசிகர்களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டு ரஜினியின் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஆதரவு தெரிவித்தும் பதினைந்தாயிரம் பேரைத் தான் கூட்ட முடிந்தது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஜினிகாந்த் நிகழ்ச்சி முடிந்ததும் மோடியை சந்திக்க திருச்சியில் முகாமிட்டுள்ளார் என்று இவர்கள் பரப்பினார்கள். தனது ரசிகர்கள் கூடினாலே ஐம்பதாயிரம் பேர் வந்திருக்க வேண்டுமே? நம் ரசிகர்கள் கூட நரபலி மோடியை ஏற்கவில்லை என்பதை இந்தக் கூட்டத்தில் இருந்து ரஜினி மதிப்பிட்டதில் இருந்தும் இதை அறியலாம். இதனால் தான் திருச்சியில் முகாமிட்டுள்ளதாக இவர்கள் சொன்னபடி ரஜினிகாந்த் மோடியை சந்திக்காமலே நழுவிவிட்டார். 

மேலும் பச்சைமுத்து என்ற சாதிக்கட்சி நடத்தும் பாரி வேந்தர் கல்லூரியில் இருந்து மாணவர்களை அனுப்பியும் பேருந்துகளைக் கொடுத்தும் பதினைந்தாயிரம் பேர்தான் வந்தனர் என்றால் பீஜேபிக்காக மோடிக்காக வந்தவர்கள் ஆயிரம் கூட தேற மாட்டார்கள் என்பது உறுதியாகும். நாம் அறை கூவலாகவே சொல்லளாம். அந்த இடத்துக்கு நாங்கள் வருகிறோம். தினத்தந்தியும், லோட்டஸ் டிவியும், பாஜகவும் சொன்னது போல் நாலரை லட்சம் சேர்களை போட்டுக் காட்டினால் மோடியே பிரதமராக நாமும் ஆதரிக்களாம். அவ்வளவு வேண்டாம் ஆன்லைனில் பதிவு செய்த இரண்டரை லட்சம் பேருக்கு இரண்டரை லட்சம் சேர்களைப் போட்டுக் காட்டினால் கூட போதும். நாமும் மோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்களாம். 

ஹிஜ்ரத்தும் ம அல் ஹிஜ்ராவும்


அல்லாஹ்வின் பேருதவியால் ம அல் ஹிஜ்ராவுடன் 1434 வருடங்களை கடந்து 1435 தொட்டிருக்கிறது. இடம் பெயர்தல் என்ற அர்த்தத்திலான இவ்வருடக் கணக்கு, முதல் இடம் பெயர்தலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா விலிருந்து மதினாவுக்கு இடம் பெயர்ந்ததிலிருந்து ஆரம்பமாகிறது.
சோதனையில் உச்சத்தில் ஆரம்பமான அப்பயணம் 1434 ஆண்டுகளைக்கடந்தும் பல சோதனைகளினூடே தன் பயணத்தை தொடர்கிறது.
உயிர் வாழ இடம் பெயர்தல், உழைத்துப் பிழைக்க இடம் பெயர்தல், உயர்வைத் தேடி இடம் பெயர்தல் என எத்தனையோ இடம் பெயர்தல் சரித்திரத்தில் உண்டு. ஆனால் என் கொள்கை பிழைக்க வேண்டும். அதை பிழைக்க வைக்க நான் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே முதல் இடம் பெயர்தல் (ஹிஜ்ரத்) நிகழ்ந்தது.
இஸ்லாமியத்தின் ஒவ்வொரு அசைவுகளிலும் இந்த ஹிஜ்ரத் தன் தடங்களை பதித்ததுண்டு. ஆரம்பத்தில் தானுண்டு, தன் வேலையுண்டு என இருந்த முஸ்லிம்களை எங்கோ இருந்த பாரஸிக, ரோம வல்லரசுகள், “இவர்கள் இருக்கும் வரை நம் வல்லரசு நாட்டாண்மை நிலைக்காதுஎன பயந்து அடர்ந்தேறிய போது, அவர்களை எதிர்கொள்ளவும் முஸ்லிம்களின் நாடு கடந்த ஹிஜ்ரத் தொடர்ந்ததுண்டு.
சொந்த வாழ்வில் பிரச்னைகளால் சூழப்பட்ட எத்தனையோ சஹாபாக்கள் அமைதியைத் தேடிக்கூட இடம் பெயர்ந்த வரலாறு கள் உண்டு. இடம் பெயர்தல் ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியா வசியமானது. தேவையற்ற நேரங்களில் இடம் பெயர்பவனும், அவசியமான நேரத்தில் இடம் பெயராமல் சொந்த பூமி, சொந்த வீடு தத்துவம் பேசித் திரிபவனும் உருப்படியாக வாழ முடியாது.
கலாச்சாரங்கள், நாகரிகங்கள் என்ற பெருமைகள் கூட இடம் பெயர்ந்த மனிதர்களால் அறியப்பட்டு, உணரப்பட்டு பரவலானது தான். மலேஷிய கலாச்சாரம் என்பது மூன்று இனங்களின் கலவையாகவே (மலாய் இந்திய சீன) அறியப்படுவதற்கு, எங்கேயோ இருந்து இடம் பெயர்ந்து வந்து மலேஷியாவை வளப்படுத்திய மறுக்க முடியாத மக்களான  இந்திய, சீன மக்களும் காரணம். 
கொள்கைகளை உயிர் வாழவைக்க ஆரம்பித்த இஸ்லாத்தின் ஹிஜ்ரத் இன்று சொந்த நாட்டிலேயே அகதியாய் ஒரு இடத்தி லிருந்து மற்றொரு இடத்திற்கு ஹிஜ்ரத் செய்து உயிர் வாழும் போராட்டமாய் முஸ்லிம்களின் வாழ்வு ஊசலாடிக் கொண்டி ருக்கும் நிலையில் புதிய ஹிஜ்ரத் 1435 ஒரு விடியலாக அமையட்டும்.
காலப்போக்கில் மறைந்து கொண்டிருக்கும் மலேஷியாவின் தமிழ் முஸ்லிம் மக்களின் கலாச்சார ஒழுக்க மாண்மியங்கள் புதுப்பொலிவு பெறட்டும். கலப்படமற்ற இஸ்லாமிய நடவடிக்கைகள் நம் வாழ்வில் ஒளியேற்றட்டும்.
ம அல் ஹிஜ்ரா வாழ்த்துக்கள்!!! 

ஹிஜ்ரத் ஒரு வெற்றிப்படிக்கட்டு


அல்லாஹ்வின் பேருதவியால் ஹிஜ்ரா ஆண்டு  1434 வருடங்களை கடந்து 1435 ஐ தொட்டிருக்கிறது. இடம் பெயர்தல் என்ற அர்த்தத்திலான இவ்வருடக் கணக்கு, சோதனையில் உச்சத்தில் ஆரம்பமானது.
தொடர்ந்த ஒவ்வொரு ஹிஜ்ரத்தும் இஸ்லாத்தின் உயர்வை அடித்தளமாகக் கொண்டே காலடி வைத்தது.  தானுண்டு, தன் வேலையுண்டு என இருந்த முஸ்லிம்களை எங்கோ இருந்த பாரஸிக, ரோம வல்லரசுகள், “இவர்கள் இருக்கும் வரை நம் வல்லரசு நாட்டாண்மை நிலைக்காதுஎன பயந்து அடர்ந்தேறிய போது, அவர்களின் ஆளுமையில் மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்த மக்களுக்கான அமைதிப்படையாக ஹிஜ்ரத் சென்றது.
ஸ்பெயினுக்கு மூஸப்னு நுழைர் என்ற மாவீரரின் தளபதியாக தாரிக் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டி, அவரின் பின்னே மூஸப்னு நுழைரும் தன் தளங்களை விரிவு படுத்திக்கொண்டே போனது கூட அம்மக்களின் விருப்பத்திற் கிணங்க விடுதலை தந்த அமைதிப்படையாகத்தான்.
இந்தியாவின் முதல் அரபுத் தளகர்த்தர் முஹம்மது பின் காஸிம், சிந்துவை ஆண்ட தாஹிர் என்ற சர்வாதிகாரிக்கெதிரான அமைதிப்படையாகவே ஹிஜ்ரத் செய்து வந்து வெற்றி கண்டார்.
முகலாய மன்னர் பாபர் ஆக்கிரமிக்க வந்தவரல்ல. இங்கிருந்த இப்ராஹிம் லோடி என்ற சர்வாதிகாரிக்கெதிராக இங்கிருந்த சிற்றரசர்களான ஹிந்து மன்னர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று அமைதி உருவாக்க வேண்டியதாலேயே.
முஸ்லிம்களின் ஒவ்வொரு ஹிஜ்ரத்தும் இஸ்லாமியத்தின் வெற்றிப்படிக்கட்டுகளாகவே இருந்தது.  முஸ்லிம்கள் அரபுலகம் விட்டு ஹிஜ்ரத்தின் பெயரால் நகர நகர அறிவொளி, ஆன்மிக ஒளி என முஸ்லிம்களின் சகல பரிமாணங்களையும் எல்லா நாடுகளும் உள்வாங்கிக்கொள்ளும்   அற்புதம் நிகழ்ந்தது.
வரலாற்றுக்கலை அஸ்மாவுர்ரிஜால் எனும் மனித மாண்புக்கோர்வையை முஸ்லிம்கள் உண்டாக்கி அதை ஹதீஸ்களை தரம் பிரிக்கும் ரசவாதக் கலையாக கையாண்ட போது உலகம் வியந்தது.
இயற்கை மருத்துவத்திலிருந்து இன்றைய மருத்துவம் வரை இஸ்லாமில் இல்லாத மருத்துவம் இல்லை என இப்னு சீனா கிளம்பி கானூனுத் திப்பு எனும் அகராதியை ஐரோப்பாவுக்கே பாடமாகத் தந்த போது முஸ்லிம்களின் மருத்துவ ஹிஜ்ரத் மாண்படைந்தது.
இஸ்லாம் விரிவடைய விரிவடைய முஸ்லிம்களின் ஹிஜ்ரத் கட்டிடக்கலையிலிருந்து, கல்விக்கலையின் சகல நுணுக்கங்களால் உலகளாவியது. முகலாயர்களின் வருகை கூட இந்தியாவின் சுவையையே மாற்றியமைத்தது என்பதை பிரியாணி சாப்பிடும் எவரும் மறக்க முடியாது.
அரசாள மட்டுமல்ல, ஆரோக்கிய உணவிற்கும் கூட இஸ்லாமிய ஹிஜ்ரத் வழிகாட்டியாகவே அமைந்தது. மொத்தத் தில் ஹிஜ்ரத்தை ஆராய்ந்தால் அது ஒட்டு மொத்த வாழ்வின் வெற்றிப்படிக்கட்டுதானே!
புத்தாண்டு வாழ்த்துக்கள்.