Wednesday, October 27, 2010

என்ன பாவம் செய்தார்கள் முஸ்லிம்கள் ?

உச்ச நீதி மன்றத்துக்கு ஜனாதிபதி ஒரு விஷயத்தில் தீர்ப்பளிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பிரச்னை என்னவென்றால், பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் அதற்கு முன்னர் இந்துக் கோவிலோ அல்லது வேறு ஏதாவது கட்டிடமோ இருந்ததா?
அந்தப் பிரச்சினையை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரித்தது. அந்த நீதிபதிகளில் நானும் ஒருவன். அந்தப் பிரச்சினை பற்றி இப்போது பேசி புதைக்கப் பட்ட பழைய விஷயங்களை மீண்டும் வெளிக்கொணர வேண்டாம்.
அதற்கு முன் சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தை மத்திய அரசு கைப்பற்றுவது குறித்தும், அங்கே பார்த்தவர்கள் கரசேவகர்கள் பூஜை செய்வது குறித்தும் எழுந்த ஒரு பிரச்சினை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் m n வெங்கடாசலய்யா மற்றும் v n ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மீது விசாரணைக்கு வந்தது.
அப்போது அட்டர்னி ஜெனரல் மீலன் பானர்ஜி வாதிடும் போது "தனக்கு கரசேவகர்கள் பாப்ரி மஸ்ஜிதை இடிக்கப் போவதாக உறுதியான தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், எனவே கரசேவகர்களை சர்ச்சைக்குரிய இடத்தில் பூஜைக்கு அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டார்.
ஆனால் அதை, அவரது வாதத்தை உதாசீனம் செய்த உச்சநீதிமன்றம், கரசேவகர்கள் கூடுவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்திருக்காவிட்டால் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது தடுக்கப்பட்டிருக்கும்.
உத்திரப் பிரதேச முதல்வர் கல்யான்சிங்கிற்கு ஒரு நாள் சிறை தண்டனை அளித்தது சரியாக ஆகாது.
“தற்போது அலஹாபாத் உயர்நீதிமன்றம் அயோத்தியின் உரிமை வழக்கில் அளித்திருக்கும் தீர்ப்பை படித்து அதிர்ச்சியடைந்தேன். அது ஒரு தீர்ப்பா என்பதிலேயே சந்தேகம் இருக்கிறது”.
சட்டத்தின் ஆளுமை மக்களாட்சி தத்துவம் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக உள்ளது.
-இது சமீபத்தில் டெல்லியில் நடந்த, "அலஹாபாத் உயர் நீதி மன்ற தீர்ப்பு" சம்பந்தமாக ஒரு கருத்தரங்கில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ, எம். அஹமதி தெரிவித்த கருத்து.

மேற்க்கண்ட செய்தியில் சாதாரண பாமரன், எனக்குத் தெரியும் உண்மைகள்:
  • பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் உண்மையான விபரங்கள் அறிவார்ந்த நீதிபதிகளால் தெரிவிக்கப் பட்டவை சுத்தமாக புதைக்கப் பட்டிருக்கிறது.
  • காவி மனப்பான்மை நீதிபதிகளால் தீர்ப்பு கொடுக்கப்படும் பொது, அது நீதிக்கு எதிரானது என்று தெரிந்து, அதனால் பொது மக்கள் கொந்தளித்து விடக்கூடாது என்று, அவர்களின் கைகளைக் கட்டிப்போட சர்வாதிகார அரசாங்கத்தை விடக் கொடுமையாக போலிஸ் ராணுவம் என ஏவி, கடுமையான அடக்கு முறைகளைக் கையாண்டு அதை நசுக்க முனைவதும், அதுவே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் ஆளுபவர்களின் (அது காங்கிரஸ் ஆயினும்) காவி முகமூடியை வெளிக்காட்டுவதும் தொடராக நடந்து வருவதை மேற்கண்ட பேச்சு ஞாபகப் படுத்துகிறது.
  • தடா, போடா என்ற பெயரிலான முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறை சட்டங்களுக்கு, ஒரு ஸ்கெட்ச் பேனா, ஹிந்துக்களுக்கு எதிரான ஒரு போஸ்டர், ஒரே ஒரு ஜெலட்டின் குச்சி இவைகளை போலிஸ் காரர்களையே வைத்து ஏற்பாடு செய்து, முஸ்லிம்களில் கைதுக்குரியவர்கள் லிஸ்ட் தயார் செய்து, அவர்களை நாடு இரவில் எழுப்பி, அவர்கள் தூக்கக் கலக்கத்தில் இருக்கும் நிலையில் கைகளில் திணித்து, அன்றிலிருந்து நீங்கா சிறைவாசத்தில் அவர்களை சிக்க வைத்து அராஜகம நடத்தும் நீதி, மாநில அரசு கையில் இருக்கும் திமிரில் பாப்ரி மஸ்ஜிதை இடிக்க எல்லா உதவிகளையும் செய்த கல்யான்சிங் கிற்கு ஒரு நாள் சிறை என்ற காமெடித் தீர்ப்பும் வழங்கிய கொடுமையும் தெளிவாகிறது
  • ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று, ஹிந்துக்கள் நம்பியவன் ஏமாற்றும் போது நொந்து பொய் சொல்வது வழக்கம். அந்த ராமன் விஷயத்தில் கற்பனை ஜென்ம பூமிக்காக, இந்தியாவை தாய் நாடாகக் கொண்ட நாட்டுப் பற்று மிக்க முஸ்லிம்கள் இப்படி நொந்து கொள்கிறார்கள், " காங்கிரஸ் ஆண்டால் என்ன? பி.ஜே.பி ஆண்டால் என்ன? இஸ்லாமியர் இரண்டாம் தரக் குடிமக்கள்தானே?"
  •  உச்ச நீதிமன்ற நீதிபதிக்கே அலஹாபாத் தீர்ப்பு அதிர்ச்சி என்றால், நமக்கு.....?

0 comments:

Post a Comment