Friday, November 5, 2010

சிவகாசி அஸ்மத் பாடல்கள் - 3

சொல்லப் போனா ஏனிந்த கோபம்!
சொல்ல மறந்தா வாராதோ பாவம்.!
தாயினமே பண்பைப் பேணி வாங்க!
தாயினத்தின் பண்பைப் பேணி வாங்க!
(சொல்லப்....)

பண்பான பாத்திமுத்தின் பரம்பரையே
அந்தப் பண்பாட்டை மறந்தது சரியில்லையே!
பண்போடு நாறுகின்ற குணமில்லையே?
உங்கள் அன்றாட வாழ்க்கையிலே தீனுமில்லையே?
உங்கள் அன்றாட வாழ்க்கையிலே தீனுமில்லையே?
(சொல்லப்.....)

பாத்திமுத்தின் வாழ்க்கையை நான் படித்துப் பார்த்தேன்- அந்தப்
பண்புகளை உங்களுடன் ஒத்துப் பார்த்தேன்.
ஊருலகில் நாலு பக்கம் எட்டிப் பார்த்தேன் -ஒரு
உத்தமியும் காணவில்லை வெட்கிப் போனேன்.
ஒரு உத்தமியும் காணவில்லை வெட்கிப் போனேன்
(சொல்லப்.....)

உன் கால்கள் வீதியெங்கும் படலாமா?- தலை
முக்காடு போட வெட்கப் படலாமா?
குர் ஆனின் பாதையை நீ விடலாமா? -இதைக்
கூற வரும்போது கோபப் படலாமா?
இதைக் கூற வரும்போது கோபப் படலாமா?
(சொல்லப்.....)

(வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது..... இசையில்)

0 comments:

Post a Comment