Wednesday, September 12, 2012

பித்அத்துகளைச் சாடும் பித்அத்துகள்

அல்லாஹ் குர் ஆனில் வமா ஆதாகுமுர்ரஸூலு ப குதூஹு வமா நஹாக்கும் அன்ஹு  பன்த்தஹூ (அல்லாஹ்வின் தூதர் எதை கொண்டு வந்தார்களோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள். எதை எல்லாம் தடுத்தார்களோ அதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்) என்கிறான். இது குர் ஆனுக்கு நீ விளங்குகிற அர்த்தம் வேறு. நபிக்கு நாம் விளக்குகிற அர்த்தம் வேறு  என்பது பொருள்.
ந்பிக்கு அடுத்து தெளிவாக குர் ஆனை விளங்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஸஹாபாக்கள். அதனால்தான் அலைக்கும் பி சுன்னதீ. வ சுன்னத குலஃபாஅர் ராஷிதீனல் மஹ்திய்யீன் (உங்களுக்கு என்னுடைய வழிமுறையுடன் எனக்கு பின்னால் உங்களை வழி நடத்தும் நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் (அபு பக்ரின், உமரின், உஸ்மான், அலீயின் (ரழி-அன்ஹும்) வழிமுறையும் ஆதாரமாகும்) என்றார்கள்.
எனவேதான் ரஸூல் (ஸல்) அவர்களுக்குப் பின் குர் ஆனை தொகுக்கும் விஷயத்திலும், குடிகாரனுக்கான தண்டனையை வரையறுக்கும் விஷயத்திலும், தராவீஹ் இருபது ரக் அத்துகளை ஒரே இமாமின் கீழ் நடத்தும் விஷயத்திலும், ஜும்ஆவுக்கான முதல் பாங்கை எற்படுத்திய விஷயத்திலும்,
ரஸூல் (ஸல்) வர்ணித்த பொற்காலத்தில் வாழ்ந்த உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) எற்படுத்திய ஹதீஸ்களைத் தொகுக்க கட்டாயம் ஏற்படுத்தியதிலும் இந்த சமுதாயத்தின் அறிவும் வளர்ச்சியும் வணக்க வழிபாடும் மேன்மையடைந்தது. முஸ்லிம்கள் அந்தப் பெருமக்களை இன்றும் நன்றியுடன் எண்ணிப் பார்க்கிறது.
ஆனால் அழிவுக் காலத்தின் அடையாளமாய் 1400 ஆண்டுக் காலத்திற்குப் பின் தமிழ் முஸ்லிம்களுக்குப் பிடித்த கெரகமாக முளைத்த அற்பர்கள் சிலர் பித் அத்துகளை அழிக்கிற போர்வையில் ஸஹாபாக்களையே இழிவு படுத்தி இப்போது ரஸூல் (ஸல்) அவர்களையே இஸ்லாத்தின் முழுமையான வழிகாட்டியில்லை என்று வக்கிரம் கக்க ஆரம்பித்திருக்கிறது. 
இந்த பைத்தியக்காரர்கள் குர் ஆனையோ, ஹதீஸையோ பின்பற்றக் கூடியவர்களல்ல், மனோ இச்சைகளை பின்பற்றக் கூடியவர்கள் என்பதை இவர்கள் உருவாக்கிய பித் அத்துகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
1. அரசியல் ஹராம் என்பது 1980 களின் நிலை. பழனிபாபா வஃபாத்தான போது இவர்கள் சில சட்டங்களிருந்து வாபஸ் ஆனபோது, உயிர் பிழைக்க இருந்த ஒரே வழி அரசியலை பிழைப்பாகக் கொள்வதுதான் என்று இருந்ததால்தன்னோடு இருந்த இளைஞர்களை  தக்க வைக்க அரசியல் ஆகும் என்ற பித் அத்தை ஆரம்பித்தார்கள். 
2. பித் அத்தில் ஒரு படி ஏறியாயிற்று. இனி சரம் சரமாக பித் அத்துகளின் உருவமாகவே மாறிப் போனார்கள். அவுலியாக்களின் கொடிகளை கிண்டல் செய்த இவர்களை அல்லாஹ் கொடியேற்ற, கொடியேந்த வைத்தான். இன்று வரை அந்த கருப்பு வெள்ளை கொடிக்கு மழுப்பலில்லாத ஆதாரம் காட்டவில்லை. 
3. பச்சைக் கொடியை, பச்சைப்போர்வையை கிண்டல் பண்ணாத மேடையில்லை என்ற நிலை மாறி, பிச்சைக்காரகள் வசூல் பண்ணிய காசுசுகு சண்டை போடுவது போல் நாறிப்போய் தூய அரசியல் இரண்டாக பின்னமானபோது அவுலியாக்களின் பச்சைக்கொடியை பிச்சையேடுத்து கருப்பு வெள்ளையுடன் சேர்த்து பாவப் பரிகாரம் செய்து கொண்ட பித் அத் அரங்கேறியது.
4. அரசியல் என்றாலே அயோக்கியத்தனம் வந்து விடும்தானே? அன்று வரை பள்ளிவாசல்களுக்கும், உளறுவாயன்களின் பிரச்சாரத்துக்கும் கிறிஸ்தவர்களைப் போல் பெண்களை வெளியே இழுத்து வந்தவர்கள், போராட்டங்களுக்கும் இழுத்து வந்த பித் அத்தை ஆரம்பித்தார்கள்.
5. நடுத்தெரு தொழுகைப் போராட்டம் என தொழுகையையே அசிங்கப் படுத்திய பித் அத்துக்கு தனிப்பெரும் சொந்தக்காரர்கள் இவர்கள்தான். 
7. இறந்தவனுக்கு வருஷ ஃபாத்திஹா ஓதுவது ஷிர்க் என்று சொன்ன இவர்கள் டிசம்பர் 6 ல் வருஷம் மறக்காமல் பாத்திஹா ஓதித் தொலைக்கிறார்கள். (இதுலே வேடிக்கை என்னன்னா, இவர்கள் அரசியல் ஹராம் ஃபத்வாவில் இருந்த போது நடந்தது பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, அரசியலில் நுழைந்தது 1996 ல். இடித்த பிறகு நாலு வருஷம் மய்யித்தாக இருந்து விட்டு 96 ல் இருந்து இன்று வரை வருஷ கத்தம் மறக்காமல் ஒதுகிறார்கள். (இறந்தவனை நினைத்துப் பார்த்து ஒதுவது கத்தம் என்றால், இதுக்குப் பேரு என்ன? அவனாவது உயிருள்ள மனிதன். இதுக்கு உயிர் கூட இல்லையே?)
8. அவுலியாக்களை, நாதாக்களை ஷஹீத் என்று சொல்வது ஷிர்க். ஆனால், அரசியல் பிழைப்புக்காக திப்பு சுல்தான் கான் சாஹிப் இவர்களெல்லாம் ஷஹீதாகிப் போன பித் அத் இந்த பித்துகள் உருவாக்கியதுதான்.
இதெல்லாம் எனக்குத் தெரிந்த பித் அத்துகள். இன்னும் உங்களுக்கு தெரிந்ததையும் வரிசைப் படுத்துஙகள். இவர்கள் போகிற வரை போகட்டும் என விட்டு விடுங்கள். எதற்கும் ஒரு முடிவு உண்டு.
சிலரை சில காலமும், பலரை பல காலமும் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது.

0 comments:

Post a Comment